3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசிற்கு இபிஎஸ் கண்டனம்

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசிற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசிற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி ஆகிய இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு காரணமான இந்த திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள். 
ஸ்டாலின் தலைமையிலான பொறுப்பற்ற இந்த அரசின் அலட்சியப் போக்கால் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு போன்ற சிறிய காரணங்களுக்காக, இந்த மூன்று மருத்துவ கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் இளங்கலை மருத்துவ இடங்களை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது வேதனைக்குரியது மட்டுமல்ல தமிழகத்திற்கே இது ஒரு பெரும் தலைகுனிவு.
கடந்த அம்மா ஆட்சியில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தபோது பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
தற்போது இந்த திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற அரசு அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போட்டிருப்பதை மிகுந்த வேதனையுடன் கண்டிப்பதுடன்.  உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு மீண்டும் இந்த மூன்று கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நிர்வாக திறனற்ற இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com