தி கேரளா ஸ்டோரி படத்தில் உண்மை இல்லை: கமல்ஹாசன்

தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பிரசாரப் படங்களுக்கு நான் எதிரானவன் என ஏற்கெனவே கூறிவிட்டேன். உண்மைக் கதை என படத்தில் கூறினால் மடடும் போதாது, அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல என்றார்.

இயக்குநர் சுதிப்சென் இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரையிடலுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com