ஜப்பானின் ஒசாகா தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 
ஜப்பானின் ஒசாகா தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று(மே 26) ஜப்பான் சென்றார்.  

நேற்று அந்நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,

'ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்!

கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான கோமாட்சு நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன்.

ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில்  கோமாட்சு தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி  2024 ஜனவரியில் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு  அழைப்பு விடுத்தேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com