
மேற்கு வங்க மாநிலம் டெகாங்கா கிராமத்தைச் சேர்ந்த பண்ணைக் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் எதிர்பாராதவிதமாக ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
ஒரு கூலித் தொழிலாளி, காலையில் எழுந்ததும், தனது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில், எதிர்பாராதவகையில் ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்திருந்தால், 26 வயதே ஆகும் மொஹம்மது நசிருல்லா மண்டல் என்ற கூலித் தொழிலாளிக்கு எப்படியொரு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நிச்சயம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவரது வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டதை அறிந்த டேகனா சைபர் செல் காவல்துறையினர், மண்டல் வீட்டுக்கு வந்து காவல்துறை நோட்டீஸை ஒட்டிவிட்டு, மே 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிவிட்டுச் செல்லும்போதுதான் தெரிய வந்தது.
தற்போது தினக்கூலியான மண்டல், தனது வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகையை யார் வைத்தார்கள், எதற்காக வந்தது என்று காவல்துறை கேள்வி எழுப்பினால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். தவறான பணப்பரிமாற்றம் நடந்ததை அறிந்த வங்கி, உடனடியாக, அவரது வங்கிக் கணக்கையும் முடக்கிவைத்துள்ளது.
காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து தன்னை அடித்துத் துன்புறுத்துவார்களோ, சிறையில் அடைப்பார்களோ என்று நினைத்து மண்டல் கவலையுற அவரது குடும்பத்தினர், வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டது குறித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.