
நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனிவிமானம் மூலமாக திருவாவடுதுறை ஆதீனம் தில்லி சென்றுள்ளார்.
தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே 1947ல் திருவாவடுதுறை ஆதினம் அளித்த செங்கோல் நிறுவப்படுகிறது.
இந்த செங்கோல் இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ல் திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் இந்திய விடுதலையை அடையாளப்படுத்தும் வகையில் அப்போதைய பிரதமா் நேருவிடம் கொடுக்கப்பட்டது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசன் முடிவு! ஆனால்...
இப்போது மீண்டும் அந்த செங்கோல் நிறுவப்பட உள்ளதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பலரும் தில்லிக்கு சென்று திறப்புவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இவ்விழாவில் கலந்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் இன்று தில்லி சென்றார்.
முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நீதி ஆயோக் கூட்டம்: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் புறக்கணிப்பு!