காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாத சேவை உற்சவம்

பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருந்தேவி தாயாரை தரிசனம் செய்து வணங்கினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாத சேவை உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஒட்டி, பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருந்தேவி தாயாரை தரிசனம் செய்து வணங்கினர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் கடை வெள்ளிக்கிழமையை ஓட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெருந்தேவி தாயார் திருப்பாத சேவை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

திருப்பாத சேவை உற்சவத்தை ஒட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, கனகாம்பரப்பூ, மலர் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க கோவிலின் ஆழ்வார் பிரகாரங்களில் உலா வந்து வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர வசந்த மண்டபத்தில் பெருந்தேவி தாயாரை  எழுந்தருள செய்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

வெள்ளைப் பட்டு உடுத்தி ஆண்டுக்கு ஒரு முறை திருப்பாதத்தை வெளியே காட்டி  திருப்பாத  தரிசனம் தரும் பெருந்தேவி தாயாரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com