
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷ வண்டு கடித்ததில் கிராம நிா்வாக அலுவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முல்லை நகா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் இந்திராகாந்தி (54). இவா் மல்லி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இவரது கணவா் தங்கராஜ் 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டாா். இவா்களுக்கு முத்துமீனா என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில் முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்துள்ளது.
இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து சிவகாசி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இந்திராகாந்தி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...