கோப்புப்படம்
கோப்புப்படம்

அக்டோபரில் 85.50 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
Published on

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 85,50,030 பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக அக். 20 ஆம் தேதி அன்று 3,60,743 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 1,13,117 பேர் பயணித்துள்ளனர். 

நிகழாண்டில் மாதம் வாரியாக மெட்ரோ ரயிலில் பயணித்தவா்களின் எண்ணிக்கை விவரம்:

ஜனவரி - 66,07,458

பிப்ரவரி - 63,69,282

மாா்ச் - 69,99,341

ஏப்ரல் - 66,85,432

மே - 72,68,007

ஜூன் - 74,06,876

ஜூலை - 82,53,692

ஆகஸ்ட் - 85,89,977 

செப்டம்பர் - 84,37,182

அக்டோபர் - 85,50,030. 

மேலும் க்யூஆர் கொடு, பயண அட்டைகள், வாட்ஸ் ஆப் எண் (83000 86000), பேடிஎம் செயலி மூலமாக 20% கட்டணச் சலுகையுடன் மெட்ரோ ரயில்களில் பயணிக்க டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com