டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு! நவ. 25 முதல் குறுஞ்செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :2 நவம்பர் 2023, 9:59 am

DIN

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ஆம் தேதி தொடக்கிவைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, அக். 25 ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தகுதியானவர்களுக்கு வருகிற நவ. 25 முதல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும் என்றும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.