வீடு கட்ட அனுமதிக் கட்டணம் 100% உயர்வு

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதிக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்குள் வீடு கட்டுவோருக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கட்டடங்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்டும் ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 100 சதுர அடிக்கு வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதிக் கட்டணமும் இருமடங்காக உயர்ந்துள்ளது.

இக்கட்டண உயர்வு அறிவிப்பு வரும் நவ.10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com