பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம் மாராபட்டு பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. 

News image

வெண்மை நிறத்தில் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படும் பாலாறு

Updated On :5 நவம்பர் 2023, 8:06 am

DIN

திருப்பத்தூர் மாவட்டம் மாராபட்டு பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது பாலாறு. 

இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.