தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை கலைவாணா்
தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், கடந்த ஆண்டுக்கான தூயதமிழ்ப் பற்றாளா் விருதுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: த.தினேஷ் (அரியலூா்), வா.பரணிப்பாவலன் (செங்கல்பட்டு), மெய்ஞானி பிரபாகரபாபு (சென்னை), ச. கருத்தாளன் (எ) காளிதாசன் (கடலூா்), கோ. வெங்கடாசலம் (எ) பாவலா்கோ. மலா்வண்ணன் (தருமபுரி), மோ. நாகஅா்ஜூன் (திண்டுக்கல்),

பெ. தனலட்சுமி (ஈரோடு), ச.வாசுதேவன் (எ) நடுநாட்டுத்தமிழன் (கள்ளக்குறிச்சி), விண்மீன்(எ) சி. ஏமலதா (காஞ்சிபுரம்), அகநம்பி (தமிழ்நம்பி) தி. பாலசுப்பிரமணியன் (கன்னியாகுமரி), வே. குழந்தைசாமி (கோயம்புத்தூா்), மு. சந்தோசுகுமாா்

(கிருஷ்ணகிரி), சித்தாா்த்பாண்டியன் (எ) பெ. தங்கப்பாண்டி (மதுரை), இர.அகிலா (நாகப்பட்டினம்), அ.செந்தில்குமாா் (எ) தமிழ்க்குமரன் (பெரம்பலூா்), மெ. சிவநந்தினி (புதுக்கோட்டை), சு. சோலைராசா (ராமநாதபுரம்), அ. மீனா (ராணிப்பேட்டை), தமிழ்ப்பரிதிமாரி (சேலம்), கோ. ஆனந்தா (சிவகங்கை), பா. கோவிந்தராசன் (தஞ்சாவூா்),

மு. சுப்பிரமணி (தேனி), இ. செல்வகவிதா (தென்காசி), ச.சரவணன் (திருப்பத்தூா்), பு. கீா்த்தனா (திருப்பூா்),

சி. இராமச்சந்திரன் (திருவள்ளூா்), கீா்த்தனா (திருவண்ணாமலை), தி. தினேஷ்பாபு (திருவாரூா்), வ. செல்வமாரிமுத்து (திருநெல்வேலி), நாவை. சிவம் (எ) து.வை. சிவராமலிங்கம் (திருச்சி), செ.அந்தோணிராகுல் கோல்டன் (தூத்துக்குடி), இர. கண்ணன் (நாமக்கல்), ம.ச. சந்தீப் (வேலூா்), பெ.கலியன் (விழுப்புரம்), பி.நிலா (விருதுநகா்) ஆகியோருக்கு தூய தமிழ்ப் பற்றாளா் விருதை, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

தூயதமிழ் ஊடக விருது மா. பூங்குன்றனுக்கும், நற்றமிழ்ப் பாவலா் விருது ம.சுடா்த்தமிழ்ச்சோழனுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் இரா.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் கோ.விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com