திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முரளி(42). இவருக்கு திருமணமாகி மனைவி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஆம்பூர், உமராபாத் ,வாணியம்பாடி ஆகிய இடங்களில் கிராமிய மற்றும் நகர காவல் நிலையத்திலும், மதுவிலக்கு அமல் பிரிவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை வாணியம்பாடி அருகே நடைபெற்ற பேருந்து விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்து சக காவலர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், ஓய்வுக்காக காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை பணியில் இருந்த காவலர்கள் சில மணி நேரம் கழித்து எழுப்ப முயற்சி செய்த போது தலைமை காவலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடல் கூறாய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.