நீலகிரியில் சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்!

ஊருக்குள் நுழைந்த சிறுத்தையால் 6 பேர் காயப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்!

நீலகிரி குன்னூரில் புரூக்லேண்டுக்கு அருகே சிறுத்தை தாக்கி 6 பேர் காயமடைந்துள்ளனர். 

சிறுத்தை நாய் ஒன்றைத் துரத்திக்கொண்டு காட்டிற்குள் இருந்து ஊருக்குள் வந்துள்ளது. நாயைத் துரத்திக்கொண்டே ஒரு வீட்டுற்குள் சென்றுவிட்டது சிறுத்தை. அக்கம்பக்கத்தினர் பயந்து வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை ஊர் மக்களைத் தாக்க ஆரம்பித்தது. சம்பவ இடத்தில் தகவல் சேகரித்துக்கொண்டிருந்து பத்திரிக்கையாளர் உட்பட 6 பேரை சிறுத்தைக் காயப்படுத்தியது. 

தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்த மக்கள் குன்னூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

சிறுத்தை இன்னும் வீட்டுற்குள் இருப்பதாகவும் அதைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமீப காலமாக இந்தப்பகுதிகளில் அதிகமாக சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் ஐயம் தெரிவித்துள்ளனர். சிறுத்தை காட்டிற்குள் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேடி ஊருக்குள் வருவதாகக் கூறுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com