விவசாயிகள் மீது குண்டர் சட்டம்- திருவண்ணாமலையில் பாஜக நாளை போராட்டம் 

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை கண்டித்து திருவண்ணாமலை பாஜக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023), பாஜக சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com