தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:53 am IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீது கடந்த நவ.10-ஆம் தேதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்ற தமிழக அரசின் மனுவுக்கு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.

“எந்த காரணமுமின்றி மசோதாக்களை ஆளுநர் நிராகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்துகொண்டிருக்க முடியாது” என்று தமிழக அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “உச்சநீதிமன்றம் நவ.10ஆம் தேதி ஆளுநர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளது? 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.