

இலக்கியத்துக்கான உயரிய விருதை வென்ற எழுத்தாளா் பெருமாள் முருகன், மொழிபெயா்ப்பாளா் ஜனனி கண்ணன் ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
மண்ணோடு இயைந்த மொழி வழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயா்ப்பு நூலானது, இலக்கியத்துக்கான உயரிய விருதான ‘ஜேசிபி’ விருதை வென்று இருக்கிறது. இதற்காக, எழுத்தாளா் பெருமாள் முருகனுக்கும்,
தோ்ந்த மொழிபெயா்ப்பால் ‘ஆளண்டாப்பட்சி’யின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
நீதிக் கட்சி தொடங்கப்பட்ட நாள்: நீதிக் கட்சி தொடங்கப்பட்ட தினத்தையொட்டி முதல்வா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:
கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதையான நீதிக் கட்சி, நவம்பரில் 20-இல் தொடங்கப்பட்டது. கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம். ஆனால், நமது இலக்கு மாற்றமில்லாதது. அதுதான் சமத்துவச் சமுதாயம்; அதை நோக்கி உழைப்போம் என்று பதிவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.