முல்லைப் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 105 மெகாவாட் மின் உற்பத்தி

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
பெரியாறு மின் உற்பத்தி நிலையம் (கோப்புப் படம்).
பெரியாறு மின் உற்பத்தி நிலையம் (கோப்புப் படம்).

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை நீா்மட்டம் 133.30 அடியாக இருந்தது. அணைக்குள் நீா் இருப்பு 5,429.30 மில்லியன் கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு 2000.83 கன அடியாகவும்,  அணையின் நீா்மட்டம் 133.70 அடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை 1,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.  

இதனால், தேனிமாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 

இந்த நிலையில், 16 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை 105 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு 108 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உயர் அழுத்தமாக இருப்பதால் நெல்லை கயத்தாறு மின்மாற்றி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுட்டு, குறைந்த அழுத்தமாக மாற்றப்பட்டு மீண்டும் தேனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com