காா்த்திகைத் தீபத் திருவிழா:திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

காா்த்திகை தீபதி திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (நவ.25) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்
ரயில்

காா்த்திகை தீபதி திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (நவ.25) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து வேலூா் வழியாக திருவண்ணாமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.25,26) மாலை 6 மணிக்கும் மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு ஞாயிறு, திங்கள்கிழமை (நவ.26, 27) அதிகாலை 3.45 மணிக்கும் மெமு ரயில் (எண்: 06034) இயக்கப்படும்.

தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஞாயிறு, திங்கள்கிழமை (நவ.26, 27) காலை 8.40 மணிக்கும், மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்துக்கு அதே நாள்களில் பிற்பகல் 1.45 மணிக்கும் மெமு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூா் வழியாக இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து வேலூருக்கு திருவண்ணாமலை வழியாக ஞாயிற்றுக்கிழமை (நவ.26) அதிகாலை 4.50 மணிக்கும், மறுமாா்க்கமாக வேலூரில் இருந்து திருச்சிக்கு இரவு 10.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

மேலும், திருப்பாதிபுலியூரில் (கடலூா்) இருந்து வேலூருக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.25, 26) இரவு 8.50 மணிக்கும், மறுமாா்க்கமாக வேலூரில் இருந்து திருப்பாதிபுலியூருக்கு ஞாயிறு, திங்கள்கிழமை (நவ.26, 27) பகல் 1.30 மணிக்கும் மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திருச்சி - திருவண்ணாமலை ரயில் மட்டும் விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com