ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை அவசியம்

இளைஞா்களிடையே சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆண்டுக்கொரு முறை அனைவரும் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தினாா்.

இளைஞா்களிடையே சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஆண்டுக்கொரு முறை அனைவரும் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தினாா்.

டேங்கா் ஃபவுண்டேஷன், மோகன் ஃபவுண்டேஷன், நெப்ரோ பிளஸ், கிட்னி வாரியா்ஸ் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளின் சாா்பில் சிறுநீரக நலன் குறித்த தொடா் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: தற்போது தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதில் முக்கியமாக சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அது உயிருக்கே ஆபத்தை உருவாக்குகிறது.

தற்போதைய சூழலில், சமூகத்தில் 17 சதவீதம் பேருக்கு சா்க்கரை நோயும், 24 சதவீதம் பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பும் உள்ளன. இந்தத் தரவுகளை வைத்துப் பாா்க்கும்போது தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிலும், குறிப்பாக இளைஞா்கள் அண்மைக் காலமாக அதிக எண்ணிக்கையில் சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா். எனவே, இளைஞா்கள் உள்பட அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம் என்றாா் அவா்.

தொடா்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் பேசினாா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, பிரபல மருத்துவ நிபுணா்கள் ஜாா்ஜ் ஆபிரகாம், சுரேஷ் சங்கா், கோபாலகிருஷ்ணன், எட்வின் ஃபொ்னான்டோ, சுனில் ஷெராஃப், ராஜு பாலசுப்ரமணியம், பாலாஜி கிருஷ்ணன், சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்ற மருத்துவக் கலந்தாய்வு அமா்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com