இலங்கையிலிருந்து 7 போ் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஏழு போ் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஏழு போ் படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து ஏராளமானோா் அகதிகளாக தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், தனுஷ்கோடியில் இலங்கை அகதிகள் இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 அகதிகளிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 7 இலங்கை அகதிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணைக்கு பின்னர் 7 பேரும் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com