வி.பி. சிங்கிற்கு தந்தை வீடு தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு தாய் வீடு வேறாக இருந்தாலும், தமிழ்நாடு தந்தை வீட்டைப் போன்றது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
வி.பி. சிங்கிற்கு தந்தை வீடு தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு தாய் வீடு வேறாக இருந்தாலும், தந்தை வீட்டைப் போன்றது தமிழ்நாடு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று  (நவ. 27) திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

கலைஞர் கருணாநிதியை சொந்த சகோதரர் போன்று நினைத்தவர் வி.பி. சிங். தமிழ்நாட்டு மக்களின் ரத்த சொந்தமாக மாறியுள்ளவர் வி.பி. சிங். பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கு வி.பி. சிங்தான் காரணம்.

உரிமைக்காக போராடும் நிலை தற்போதும் உள்ளது. கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டிய நிலையே உள்ளது.

இதில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அதுதான் வி.பி. சிங் போன்றவர்களுக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்.

கலைஞர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்துக்கு அண்ணா, காமராஜர் பெயரை வி.பி. சிங் சூட்டினார். 

காவிரி நடுவர் நீதிமன்றம் அமைத்துத் தந்தவர் வி.பி. சிங். அவரின் ஆட்சியில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இலங்கை பிரச்னையை தீர்ப்பதற்காக அகில இந்திய தலைவர்களையும் அமைச்சர்களையும் திரட்டிப் பேசினார். அதில் கருணாநிதியையே முதலில் பேசச்சொன்னார்.

தமிழகத்தின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் வி.பி. சிங், எந்த அளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் கிடையாது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com