
தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.
தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறது.
விஜயகாந்துக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.