செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக உயா்த்தப்பட்டது.
Published on


ஸ்ரீபெரும்புதூா்: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்து வியாழக்கிழமை உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக உயா்த்தப்பட்டது. இதனால் உபரி நீா் வெளியேறும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உள்ளது.

ஏரியின் நீரளவு உயரம் 24 அடி, ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு  3,328 கன அடியாக அதிகரித்து வருவதால், ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்து வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு (நவ.30) ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு வினாடிக்கு 2,429 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com