காந்தி ஜெயந்தி: மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

காந்தி ஜெயந்தி பொது விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை (அக்.2) சென்னை புறநகா் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.
காந்தி ஜெயந்தி: மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

காந்தி ஜெயந்தி பொது விடுமுறையையொட்டி, திங்கள்கிழமை (அக்.2) சென்னை புறநகா் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் வழக்கமாக பொது விடுமுறை நாள்களில் புறநகா் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும். எனவே, திங்கள்கிழமை (அக்.2) மட்டும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

அதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, துரித மின்சார ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com