சென்னை மாநாட்டிற்கு வரும் காவல்துறையினர், கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பதிவில், 'சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாட்டிற்கு வரும் காவல்துறையினரிடம் உள்ள முக்கிய கோப்புகளை சுமக்கும் இந்த மஞ்சப்பை, பிளாஸ்டிக் பைகளின் தாக்குதலில் இருந்து புவியை பாதுகாக்க ஒரே வழி. புவிக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த உறுதி கூறுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று 2- வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது.
நேற்று கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
When Manjapai comes to the rescue of our police officers in carrying heavy conference stuff at the ongoing joint conference of District Collectors, Police officers and District Forest officers at Chennai
â Supriya Sahu IAS (@supriyasahuias) October 4, 2023
Only one earth and only one chance to protect it from the onslaught of⦠pic.twitter.com/oTDOORI0LR
இதையும் படிக்க | மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
நாளைய மின்தடை: சத்துவாச்சாரி
பொன்னேரி அருகே 500 போதை மாத்திரை, 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
பைக்கை மறித்து தங்க செயின் பறிக்க முயற்சி: 2 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


