92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் விரைவில் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்

நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 அக்டோபர் 2023, 6:26 am

DIN

நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இதற்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், 

'கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

தற்போது போக்குவரத்துத் துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். 

எனவே, பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.