

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) நடைபெற உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நேற்று (அக். 11) நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டுக்கு அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று கூறியது.
இதையும் படிக்க | 'குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்'
இந்நிலையில் இது தொடர்பான காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை(அக். 13) தில்லியில் கூடுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த ஆணையம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை விடப்படும். கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நமக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது. மேலாண்மை ஆணையம் கூறியதை ஏற்று கர்நாடகம் தற்போது தண்ணீர் திறந்து வருகிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.