

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ. 1,817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வழித்தடம் 5ல் கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், சாய்வு பாதைகள் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அயோத்தியில் புதிய பாபர் மசூதிக்கு நபிகள் நாயகம் பெயர்!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் மூன்று வழித்தடங்களில் 116.1 கிமீ நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 100% நிறைவு பெற்றுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.