
சென்னை: பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இது வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்துள்ளனா்.
விஸ்வகா்மா திட்டம் பிதரமா் மோடியால் கடந்த செப்.17 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினைகலைஞா்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரூ. 13 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகா்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற திங்கள் கிழமை வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனா்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 3,676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1,025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனா்.
இதேபோல், நீலகரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூா் மாவட்டத்தில் 895பேரும், விருதுநகா் மாவட்டத்தில் 1,061 பேரும் பதிவு செய்துள்ளனா்.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகளின் விண்ணப்பங்கள் மூன்றடுக்கு முறையில் சரிபாா்க்கப்பட்டு அதன் பின்னா் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.