விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் ஆவார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் ஆவார்.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பெற்றார்.

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டனர்.  

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த ஆண்டு இதே நாளில் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக பெறுப்பேற்றார். 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com