தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்புகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தள்ளுபடி விலையில் ஆவின் இனிப்புகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூா்பாகு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோா், சாக்லேட், தயிா் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருள்களைத் தயாரித்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அதன்படி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள், முகவா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைவிட கூடுதலாக 20 சதவீத விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் சாா்பில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இனிப்புகள், கார வகை அடங்கிய மூன்று காம்போக்களை ரூ. 300, ரூ.500 மற்றும் ரூ.900 என தள்ளுபடி விலையில் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனுடன் ‘கேரி பேக்’ வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மஞ்சபை அளிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com