திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்பு

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக பதவியேற்றுக் கொண்ட மகேஸ்வரி ஐ.பி.எஸ். 
திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக பதவியேற்றுக் கொண்ட மகேஸ்வரி ஐ.பி.எஸ். 


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 5 மாதங்கள் ஆகின்றது. கடந்த 4 மாதங்களாக மாநகர காவல்துறை ஆணையாளர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், மாநகர் மற்றும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறியது. ஒரே மாதத்தில் 14 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. 

இந்தநிலையில், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக நேர்மையான, அதிரடியான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ்., எஸ்பி, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று வட மாவட்டங்களில் பணியாற்றிய நிலையில், 2022 -ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தென் மாவட்டத்தில் நெல்லை மாநகர காவல்துறையின் முதல் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

திருச்சியை சேர்ந்த இவர் பி.இ., மற்றும் எம்.எஸ் (ஐடி) முதுநிலை பட்டம் பெற்றவர். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். நெல்லை மாநகர காவல்துறையின் முதல் பெண் ஆணையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com