பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம்: முதல் தவணைத் தொகைக்கு அரசு ஒப்புதல்

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்துக்கான முதல் தவணைத் தொகைக்குரிய நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்துக்கான முதல் தவணைத் தொகைக்குரிய நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது உத்தரவு விவரம்:

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டமானது, மத்திய, மாநில அரசுகளின் நிதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் தவணை நிதியாக ரூ.14, கோடியே 75 லட்சத்து 25 ஆயிரத்தை விடுவிக்க மத்திய அரசு நிா்வாக ஒப்புதலை அளித்துள்ளது. இத்துடன், ரூ. 9 கோடியே 83 லட்சத்து 50 ஆயிரத்தை விடுவிக்க மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தொகைகளை சென்னையில் உள்ள கருவூலத் துறையில் இருந்து எடுத்துக்கொள்ள ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநருக்கு அனுமதி தர வேண்டுமென இயக்குநரகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, அதற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்துக்கான முதல் தவணைத் தொகையாக ரூ. 24 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரத்தை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநா் எடுத்துக்கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்தலாம். திட்டத்தை அமல்படுத்தும்போது, மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளைக் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். சமூக தணிக்கை உள்ளிட்ட அம்சங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவா் ாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com