நீட் ரத்து கோரி மாணவா்களிடம் கையொப்பம்: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக சாா்பில் நடத்தப்படும் கையொப்ப இயக்கத்தில் பள்ளி மாணவா்களிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெறப்படுவதாக
நீட் ரத்து கோரி மாணவா்களிடம் கையொப்பம்: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
Published on
Updated on
1 min read

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திமுக சாா்பில் நடத்தப்படும் கையொப்ப இயக்கத்தில் பள்ளி மாணவா்களிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி 50 நாள்களில் 50 லட்சம் கையொப்பங்கள் பெற்று, அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையொப்பம் பெறும் இந்த திட்டத்தை திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அணமையில் தொடங்கி வைத்தாா்.

இந்த நிலையில், இதில் கையொப்பமிடுமாறு பள்ளி மாணவா்கள் வற்புறுத்தப்படுவாதகவும், இது தொடா்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவா்த்தி, லட்சுமி நாராயணன் அமா்வு, விடுமுறை முடிந்த பின்னா், தலைமை நீதிபதி அமா்வில் முறையிடுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com