
தமிழக காவல் துறையில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
எஸ்.பிருந்தா-சேலம் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாவட்டம், பொள்ளாச்சி காவல் உதவிக் கண்காணிப்பாளா்).
அய்மன் ஜமால்-ஆவடி மாநகர காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் (ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் உதவிக் கண்காணிப்பாளா்).
கெளதம் கோயல்-தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை துணை ஆணையா் (சேலம் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா்).
என்.பாஸ்கரன்-தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மதுரை 6-ஆவது அணி கமான்டன்ட் (ஆவடி மாநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா்).
சுகுணா சிங்-ரயில்வே காவல் துறையின் சென்னை காவல் கண்காணிப்பாளா் (காத்திருப்போா் பட்டியல்) என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களில் பிருந்தாவும், அய்மன் ஜமாலும் உதவிக் கண்காணிப்பாளா் பதவியில் இருந்து காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்த்தப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...