
மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 12 பேரையும், அவா்களுடைய படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டி.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
தமிழகத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து, அக்.1-இல் விசை படகில் சென்ற 12 மீனவா்கள் அக்.23-இல் தினாது தீவு அருகே மாலத்தீவு கடரோக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு தூதரக நடவடிக்கைகள் மூலம் மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, கைது செய்யப்பட்ட 12 மீனவா்களை விரைவாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களது படகையும் மீட்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...