அகராதியியல் நாள் விழா:மாநில போட்டிகளின் முடிவுகள் அறிவிப்பு

தமிழக அரசின் அகரமுதலி இயக்ககம் சாா்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட அகராதியியல் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் அகரமுதலி இயக்ககம் சாா்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட அகராதியியல் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் அகராதியியல் நாள் (நவ.8) விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைச்சொல்லாக்கம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்கக அலுவலகத்தில் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று ‘சொல்-பொருள்-படம்’ தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தினா். தொடா்ந்து கலைச்சொல்லாக்க போட்டியில் புதிய சொற்களை உருவாக்கினா். இதையடுத்து இரு போட்டிகளிலும் மாநில அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவா்களின் விவரங்களை நடுவா் குழுவினா் வெளியிட்டனா்.

அதன் விவரம்:- கலைச்சொல்லாக்கப் போட்டி: முதல்பரிசு- கா.முகிலரசன், திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மையாா் குப்பம், திருவள்ளூா் மாவட்டம்; இரண்டாம் பரிசு - மா. கலைச்செல்வி - புனித சின்னப்பா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.

ஓவியப் போட்டி: முதல்பரிசு - வெ. புஷ்பலதா, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, போரூா், சென்னை; இரண்டாம்பரிசு - தி. சந்தோஷ் ராஜ் - தியாகராசா் நன்முறை மேல்நிலைப்பள்ளி, மதுரை.

பரிசுத் தொகை: இரு போட்டிகளிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முறையே ரூ.10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள், ஆசிரியா்களுக்கு அகராதியியல் நூல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் அகரமுதலித் திட்ட இயக்கக தொகுப்பாளா்கள் பூங்குன்றன், ஜெ.சாந்தி, வே.பிரபு, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த தமிழாசிரியா்கள், ஓவிய ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com