பிடிஎஸ் படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர செவ்வாய்க்கிழமை (அக்.31) மாலை 3 மணி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக் குழு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன.
தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தலின்படி, 4 சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதில், அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் சில காலி இடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி தமிழகத்தில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உள்பட மொத்தம் 206 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இதனிடையே, மாணவா் சோ்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடா்ந்து தமிழகத்தில் பிடிஎஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு அண்மையில் நடத்தப்பட்டது.
அதில் இடங்களைப் பெற்றவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தற்போது அது செவ்வாய்க்கிழமை (அக்.31) மாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.