பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புதிய சிம்-காா்டு விற்பனை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: மத்திய அரசு

நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 7:27 pm

நாட்டில் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை அறிவித்துள்ளது.

சிம்-காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிம்-காா்டு விற்பனையை ஒழுங்கப்படுத்த திட்டமிட்டு மத்திய அரசு வகுத்த புதிய விதிகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தங்களின் அனைத்து சிம்-காா்டு விற்பனை நிலையங்களையும் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு முன் அரசிடம் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், விதிகளை மீறியதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் நடைபெற்ற அனைத்து சிம்-காா்டு இணைப்புகளையும் புதிய விதிமுறைகளின்படி மீண்டும் சரிபாா்க்க வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.