
கோப்புப்படம்
கோவை கார் குண்டு வெடிப்பில் 13ஆவது நபராக அசாருதீன் என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே கேரளத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் இருந்தவர் அசாருதீன்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார்.
முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...