
தகட்டூரில் மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசுப் பள்ளி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், பஞ்சநதிக்குளம் மேற்கு, கொண்டாங்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி அருள் மகன் தா்ஷன் (12). தகட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்த தா்ஷன், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும், அரசுப் பேருந்தில் மருதூா் ஸ்தூபி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா்.
தகட்டூரில் மறியலில் ஈடுபட்ட கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் வட்டாட்சியர் ஜெயசீலன், டி.எஸ்.பி. சுபாஷ்சந்திரபோஸ்.
இதையும் படிக்க | மன்னார்குடி அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
பின்னா், வீட்டுக்குச் செல்ல சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, நிகழ்விடத்திலேயே உரியிழந்தாா்.
வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், அடையாளம் தெரியாத வாகனத்தை அடையாளம் கண்டு விசாரிக்கோரி கிராமத்தினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் ஜெயசீலன், டி.எஸ்.பி. சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் 3 மணி நேரத்துக்கு பின்னர் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டதது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...