

ஆதித்யா -எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா -எல்1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டு ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்குப் பின், ராக்கெட்டிலிருந்து ஆதித்யா விண்கலம் பிரிந்து தனது தனித்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.