கனமழை: ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும், ஆந்திர கடற்கரையோரம் மற்றும் தெலங்கானாவின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் 12 - 20 செ.மீ. மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

இன்று நகரின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com