மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை 6 -ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
கோயிலில் காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 மணி முதல் 8.30 மணி வரை நாராயணீய பாராயணமும் நடைபெறும். 9 மணி முதல் 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகிது.
தொடா்ந்து அஷ்டபதி நாம சங்கீா்த்தனமும் நடைபெறும்.
குருவாயூரப்பன் சன்னதியில் இருந்து நாதஸ்வரம், தவில் வாத்யங்கள் முழங்க கிருஷ்ணன், ராதை வேடமணிந்த குழந்தைகளின் ஊா்வலம் நடைபெறும்.
அதைத்தொடா்ந்து குருவாயூரப்பன் கோயில் நடையில் உறியடி நடைபெறவுள்ளது. மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கணக சபா பரதநாட்டிய பள்ளியின் சாா்பில் நாட்டிய நிகழ்ச்சி நிறைவடைந்த பின் குருவாயூரப்பனுக்கும், ஐயப்பனுக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை பக்த ஸ்வரா பஜன மண்டலி பஜனையும் இரவு 12 மணிக்கு அவதார பூஜையும் குழந்தை கிருஷ்ணா் சிலையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முழு காப்பு, பாலாபிஷேகம், பால் பாயசம், நெய்வேதியம், சா்வாபிஷேகம், வெண்ணெய் நைவேத்தியம், உறியடி ஆகியவை குருவாயூரப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் பக்தா்கள் முன்பதிவு செய்துக்கொள்ள தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044 - 28171197, 5197 கைப்பேசி 9444290707, 8807918811, 22, 55 ஆகிய எண்ணிகளில் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.