இந்தியா 'பாரத்' என பெயர் மாற்றத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவா? - சு. வெங்கடேசன் எம்.பி.

இந்தியா 'பாரத்' என பெயர் மாற்றத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடி செலவா? - சு. வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாட்டின் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலுவுக்கு சமம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 
Published on


மதுரை: இந்தியா என்ற பெயரை மாற்ற செலவாகும் ரூ.14 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டின் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலுவுக்கு சமம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள், இப்போது இந்தியா என்ற பெயரை முயற்சிக்கின்றனர். 

இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். 

இவர்களது பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல தேர்தல் பயம்.

அரசியல் சாசனத்தின் முதல் வரியான "இந்தியாவின் மக்களாகிய நாங்கள்" (We, the people of India) என்பதன்  மீதே பாஜக தாக்குதல். 

இந்தியா என்ற பெயரை மாற்ற செலவாகும் ரூ.14 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டின் 1 முதல் 5 ஆம் வகுப்ப மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு, 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com