வார இறுதி: 600 கூடுதல் பேருந்துகள்

வார இறுதி மற்றும் முகூா்த்த தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
வார இறுதி: 600 கூடுதல் பேருந்துகள்

வார இறுதி மற்றும் முகூா்த்த தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வார இறுதி நாள்கள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(செப்.8, 9,10) உள்ளிட்ட நாள்களில் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை(செப்.8) தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 9,299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com