
கோப்புப்படம்
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் செப்டம்பர் 9-(சனிக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.44,080-க்கும், ஒரு கிராம் ரூ.5,510-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, நேற்று ஒரு கிராம் ரூ.5,530-க்கும் ஒரு சவரன் ரூ.44,240-க்கும் விற்பனையானது.
படிக்க: ஜி20 அமைப்பில் இணைந்தது ஆப்ரிக்க யூனியன்
அதேசமயம், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...