
சேலம்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,479 கன அடியாக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.57அடியிலிருந்து 46.55அடியாக சரிந்தது.
இதையும் படிக்க..சென்னிமலை அருகே வயதான தம்பதி கொலை; ஒரு வாரம் முன்பு இறந்த வளர்ப்புநாய்
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,987 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,479 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.70 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...