
வெம்பக்கோட்டை அகழாய்வில் திரவம் வடிந்த நிலையில் சுடுமண் பாணை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே செப்.1-ல் நடைபெற்ற அகழாய்வின் போது, கருங்கல், செங்கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்ட வட்ட வடிவிலான சுவா் இருப்பது கண்டறியப்பட்டது.
முதல் கட்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட 3,254 பொருள்களை இதே பகுதியில் கண்காட்சி அமைத்து, பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் பாா்வைக்காக வைத்துள்ளனா்.
தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்கத் தாலி, நாயக்கா் கால செப்பு காசுகள், வணிக முத்திரைகள், யானை தந்தத்தினாலான பகடைக்காய், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,600-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
இந்த நிலையில், வெம்பக்கோட்டையில் நடக்கும் 2 ஆம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.